ஆவடி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத் துறை சார்பில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உறுதி செய் திட்ட துவக்க விழா நேற்று முன்தினம்  மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று, ஊட்டச்த்தை உறுதி செய் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 6 வயதில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட 3,885 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு (ரெடி டு யூஸ் தெரபி புட்) 56 நாட்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 0 முதல் 6 மாத காலத்தில் கடுமையான ஊட்டசத்து குறைபாடு கொண்ட குழந்தைகளின் 567 தாய்மார்களுக்கு 2 ஊட்டசத்து பெட்டகம், மிதமான குழந்தைகளின் 609 தாய்மார்களுக்கு நெய், புரத சத்துமாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம் போன்றவை உள்ளடக்கிய ஒரு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.  

குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள 72,238 குழந்தைகள், 12,004 பாலூட்டும் தாய்மார்களுக்கு மற்றும் 11,958 கர்ப்பிணி பயனாளிகளுக்கு, 1760 குழந்தைகள் மையத்தின் மூலம் நேற்றுமுன்தினம் முதல் புதிய மூலபொருட்கள் அடங்கிய சத்துமாவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணைமேயர் சூரியகுமார், ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் ஆசிம்ராஜா, ஆவடி மாநகர பொறுப்பாளர் சண்.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: