×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். பதிவான 1,74,192 வாக்குகளில் 1,10,156 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகளும், தேமுதிக ,1, 432 வாக்குகளும், பெற்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தவிர எஞ்சிய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார்.

Tags : Erode Eastern Constituency ,K.K. S.S. , EVKS Receives Official Certificate of Victory in Erode East Constituency By-election Young man
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...