×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு  எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 27.2.2023 அன்று நடைபெற்ற இடைத் தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட தென்னரசு அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதிமுக சார்பில் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரது வழியில், தீய சக்திகளின் முகத் திரையைக் கிழிக்கின்ற வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தல் களத்தை சந்தித்தது.

தேர்தல் நாளன்று வாக்குப் பதிவில் தொடர் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன. பல வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிக்க பொத்தானை அழுத்தியபொழுது, கை சின்னத்திற்கு நேரே இருக்கும் விளக்கு ஒளிர்ந்து வாக்குப் பதிவானது அதிர்ச்சி அளித்தது. இது பொதுமக்களால் புகாராக தெரிவிக்கப்பட்டும், ஊடகங்களால் சுட்டிக் காட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காளர் பட்டியலில் இருந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அந்தத் தொகுதியில் இல்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் வசிக்காத 40 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

அதே போல், இறந்த சுமார் 8 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்த விபரங்களை அதிமுகவின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும் அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரங்களை வலுப்படுத்தியுள்ள மக்கள் அனைவருக்கும் எனது பேரன்பையும், வாடிநத்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தல் களத்தில் தீய சக்திகளை வீடிநத்தும் சமரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தோளோடு தோள் நின்று ஆதரவளித்து பணியாற்றிய பாரதிய ஜனதா கட்சி, தமிடிந மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிடிந மாநில முஸ்லீம் லீக், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும்,

தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள், சங்கங்கள், பேரவைகள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாடீநுந்த காலச் சூழலில், நம் கழகத்தின் மீது தொடுக்கப்பட்ட சூடிநச்சிகளையும், எண்ணிலடங்கா தடைகளையும் தாண்டி, தீய சக்திகளின் முகத்திரையைக் கிழித்தெறிய இதய தெடீநுவம் ஜெயலலிதா இருந்திருந்தால், எப்படி, எள்ளளவு சமரசத்திற்கும் இடமின்றி பணியாற்றி இருப்பார்களோ அதைப் போல, ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நாமும் பணியாற்றினோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Erode East ,Edappadi Palanisamy , Thanks to the voters who voted for AIADMK in the Erode East by-election: Edappadi Palaniswami..!
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு