×

பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியா, இத்தாலி தோளோடு தோள் நிற்கிறது: பிரதமர் மோடி

டெல்லி: பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியா, இத்தாலி தோளோடு தோள் நிற்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் எரிசக்தி, ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பத்துறைகளில் இத்தாலியுடன் உறவு மேலும் வலுப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Tags : India ,Italy ,PM Modi , India, Italy stand shoulder to shoulder against terrorism, separatism: PM Modi
× RELATED “ஏ.ஐ. தொழில்நுட்பம் அழிவுக்கு காரணமாகி...