×

மு.க.ஸ்டாலினின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை: பரூக் அப்துல்லா பேச்சு

சென்னை:  மு.க.ஸ்டாலின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை   என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பரூக் அப்துல்லா பேசியதாவது:
 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக மட்டும் அல்ல இந்தியாவிற்கே சேவையாற்ற  வேண்டும். இந்தியா கடினமான சூழ்நிலையில் உள்ளது, ஜனநாயகம், அரசியலுக்கு அச்சுறுத்தல் இருப்பத்தை நாம் மறந்தவிடக்கூடாது. நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.  ராணுவம் ஒரு நாட்டை வலுப்படுத்தாது. இந்திய மக்களே நாட்டை வலுப்படுத்துகின்றனர்.

 ஸ்டாலின் நீங்கள் தேசிய அரசியலுக்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. தேசியத்தை நோக்கி வாருங்கள் தமிழ்நாட்டை வளர்ச்சியடைய செய்ததை போல இந்தியாவையும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லுங்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதலில் நாம் வெற்றி பெற வேண்டும், யார் பிரதமராக வேண்டும் என்பதை குறித்து பின்னர் யோசிக்கலாம்.
 பிரதமர் யார் என்பது முக்கியமல்ல நாடு தான் முக்கியம், தேசத்தை பாதுகாத்தால்   140 கோடி மக்களும் பாதுகாப்பாக இருப்பர். ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஸ்டாலின், உங்கள் பிறந்தநாளில் நம் அனைவருக்கும் கடவுள் வலிமை தர வேண்டும், கலைஞர், நேரு மற்றும் என் தந்தை ஷேக் அப்துல்லா கண்ட கனவை நாம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

Tags : All India ,MG ,Stalin ,Farooq Abdullah , M. K. Stalin's service, India needs, Farooq Abdullah speech
× RELATED அகில இந்திய மகளிர் துப்பாக்கி சுடும்...