×

தனித்துவமான பார்வையால் தேசிய அரசியலில் உச்சங்களை அடைவார்: மு.க.ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டு

சென்னை: சமூக நீதி மீதான தனித்துவமான பார்வை மற்றும் சமத்துவ நல்லாட்சியால் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் அரசியல் உச்சங்களை அடைவார் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு என்னுடைய நல்லாசிகள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அனைவராலும் மு.க.ஸ்டாலின் என அறியப்படுகிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு உயர்வான சீரிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். அவரின் தந்தை போல தன்னை ஒரு நாத்திகவாதியாக பொதுவெளியில் கூறியிருக்கிறார். ஆனால் எந்த மததிற்கும் எதிரானவர் அல்ல என்றும் கூறியிருக்கிறார். தனது 14வது வயதிலேயே திமுக கோபாலபுரம் இளைஞர் அணியை தனது நண்பர்களுடன் தொடங்கி 1967 தேர்தலில் பரப்புரை மேற்கொண்டார். 1973ல்  திமுகவின் பொதுக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நேரடியாக தேர்ந்தெடுக்கட்ட முதல் மேயர் என்ற பெருமை உடையவர். சிங்காரச் சென்னை என்ற திட்டத்தை செயல்படுத்தி சென்னை மாநகரின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தினார்.விளையாட்டு துறையிலும் ஆர்வம் உள்ளவர். எமர்ஜென்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றது ஜனநாயத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறையை காட்டுகிறது.  

முதல்வர் ஸ்டாலினின் சமூக நிதி, சமத்தவம், சீர்த்திருத்தங்கள் மீதான பார்வை பாராட்டுக்குரியது. அவரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளார்.  கொரோனா காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைரஸ் உடன் போராட உதவினார்.

மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் வாயிலாக மக்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே நேரடியாக சென்று அத்தியாவசியாமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு சமர்ப்பணமாக தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெடை தாக்கல் செய்தார். நான் உட்பட அனைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து வரும் தலைமுறையினரை சமூக நீதியின் பாதைக்கு வழி நடத்த விரும்புகிறோம். அவரின் சமூக நீதி மீதான தனித்துவமான பார்வை மற்றும் சமத்துவ நல்லாட்சியால் அவர் தேசிய அளவில் அரசியல் உச்சங்களை அடைவார்.


Tags : BCE ,G.K. Akilesh Yadav ,Stalin , Unique Vision, National Politics, Akhilesh Yadav praises M.K.Stalin
× RELATED கோடை விடுமுறை முடிந்து பள்ளி...