×

மாஜி அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு தடை நீக்க மறுப்பு

மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அவரைப்பற்றிய குற்றச்சாட்டு குறித்த பகுதிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இடைக்காலத்தடை விதித்திருந்தார்.

இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கடந்தாண்டு வெளியானது, இதன் மீது மேற்ெகாள்ள வேண்டிய நடவடிக்ைக குறித்து சட்டபேரவையில் விவாதிக்கப்பட்டது. மருத்துவ மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். அறிக்கை வெளியாகி 6 மாதமான நிலையில், அறிக்கையால் தற்ேபாது மனுதாரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது என்பது ஏற்புடையதல்ல.

ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த மனுதாரர், இந்த வழக்கில் ஆணையத்தை எதிர்மனுதாரராக கூட சேர்க்கவில்லை. சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது மனுதாரர் எம்எல்ஏவாகத் தான் இருந்தார். அப்போது அவர் எதுவும் கூறவில்லை. ஆணையத்தின் அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும். அரசின் முடிவை மனுதாரர் எந்த கேள்விக்கும் உள்ளாக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்’’ என்றார்.

 ஆனால், மனுதாரருக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க மறுத்த நீதிபதி, விசாரணையை மார்ச் 24க்கு தள்ளி வைத்தார்.

Tags : Maji , Ex-minister denies allegation
× RELATED சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து...