கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மார்ச் 6 முதல் அனுமதி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, உப்புக்காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க 4 ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசி பராமரிக்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரூ.1 கோடி செலவில் ரசாயன கலவை பூசும் பணியை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து வரும் 6ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: