இலங்கையில் வரி உயர்வை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்தம்: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

கொழும்பு: வரி உயர்வை கண்டித்து இலங்கையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இலங்கையின்  பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் ரணில் விக்ரமசிங்கே அரசு கடனுதவி கோரியது. இலங்கைக்கு கடனுதவி வழங்க முடிவு செய்த சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) பெட்ரோல், டீசல், மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் மீதான வரியை உயர்த்தும்படி நிபந்தனை விதித்தது.

அதன்படி எரிபொருள்களின் வரி உயர்த்தப்பட்டதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்ததால் சாமானிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   எரிபொருள் மீதான வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தின.  இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 

Related Stories: