தெலங்கானாவில் பேட்மின்டன் விளையாடியவர் சுருண்டு விழுந்து மரணம்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

திருமலை:  தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் பேட்மின்டன் விளையாடியவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதற்கான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம்  மல்காஜ்கிரியை சேர்ந்தவர் ஷியாம்யாதவ்(38). தனியார் நிறுவன ஊழியர். ஷியாம் எப்போதும் தனது அலுவலக பணியை முடித்துக் கொண்டு தினந்தோறும் பேட்மின்டன் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் செகந்திராபாத் லாலாப்பேட்டையில்  உள்ள    உள்விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஷியாம்யாதவ் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: