×

நடிகைக்கு ‘இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ்’: வீட்டுத் தனிமையில் சிகிச்சை

புதுடெல்லி: இந்தி தொலைக்காட்சி நடிகை டெபினா பொன்னர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு ‘இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ்’ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் எனது குடும்பத்தை விட்டு விலகி உள்ளேன். எனது இரண்டு மகள்களான லியானா, திவிஷா ஆகியோர் நலமாக உள்ளனர். எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால், அவர்களை விட்டும் விலகி உள்ளேன்.

மருத்துவர்களின் ஆலோசனைபடி சிகிச்சை பெற்று வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை டெபினா தொலைகாட்சி தொடர்களான ராமாயணம், சிடியா கர், சந்தோஷி மா, தெனாலி ராமா, அலாதீன் - நாம் தோ சுனா ஹோகா உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.

Tags : Actress 'Influenza B Virus': Treatment in Home Isolation
× RELATED அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!