சேலம்: நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பே பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸிடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பே பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் 2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து வியூகம் வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்த மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை கையெழுத்து போடாதது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 15 இளைஞர்கள் உயிரிழப்புக்கு ஆளுநரே பொறுப்பு என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
