×

பிசிசிஐயின் கீழ் ஐசிசி உள்ளது: பாக். மாஜி வீரர் பாய்ச்சல்

லாகூர்: பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி அங்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார். இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்கும்போட்டிகளை துபாயில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துர் ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், ஐசிசி எப்போதும் பிசிசிஐயின் கீழ் இருப்பது தான் இதற்கு காரணம்.

ஐசிசியில் பணிபுரிபவர்கள் அனைவரும் இந்தியர்கள். ஐசிசி  வருவாயில், இந்தியா 60 முதல் 70 சதவீதம் வழங்குகிறது. நாங்கள் இல்லை என்று சொல்லும் நிலையில் இல்லை. அவர்கள் (பாகிஸ்தானுக்கு) வரவில்லையென்றாலும்  நாங்கள் செல்ல வேண்டும், ஏனென்றால் நாங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Tags : ICC ,BCCI , ICC under BCCI: Pak. Ex-player Leap
× RELATED சூப்பர்-8 சுற்று இன்று தொடக்கம்: தென்...