சித்தூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பத்திற்கு நிதி உதவிக்கான காசோலை-எஸ்பி வழங்கினார்

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பத்திற்கு நிதி உதவிக்கான காசோலையை எஸ்பி வழங்கினார்.  சித்தூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்தினருக்குநிதி உதவிக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட எஸ்பி ரிஷாந்த் தலைமை தாங்கி உயிரிழந்த காவலர் ஏ.ரமேஷ் மனைவி ஏ.லதாவிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பணியின் போது உயிரிழந்த ராஜாமணி மனைவி திராக்க்ஷாயணியிடம் ஜிபிஐ குரூப் இன்சூரன்ஸ் ஆக்சிடென்டல் நிதியிலிருந்து ₹20லட்சத்து, 65 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் எஸ்பி பேசுகையில், பணியின் போது உயிர் நீத்த குடும்பங்களுக்கு எப்போதுமே காவல்துறை பக்கபலமாக இருக்கும். ஆகவே பணியின் போது உயிரிழந்த குடும்பத்தாரின் நலனுக்காக காவல்துறை சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் உயிரிழந்த குடும்பத்தாரின் அனைத்து விதமான உதவிகளையும் செய்வதற்காக எப்போதுமே நாங்கள் முன் நிற்போம்’ என்றார்.

Related Stories: