×

மினிவேன் கவிழ்ந்து லயோலா கல்லூரி மாணவன் பலி

சென்னை: சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 67 மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த ஆலம்பாடி கிராமத்திற்கு சென்றுள்ளனர். அதில், 20 பேர் வடகரைத்தாழனூர் கிராமத்துக்கு நாடகம் போட சரக்கு வாகனத்தில் சென்றனர். கடகனூர் அருகே வளைவு சாலையை கடக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சென்னை லயோலா கல்லூரி மாணவன் சாமுவேல் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



Tags : Loyola College , Loyola College student dies after minivan overturns
× RELATED தமிழ்நாடு முழுவதும் கல்வி...