×

டேக் டெவலப்பர்ஸ் சார்பில் சோழிங்கநல்லூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்

சென்னை: சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமான டேக் டெவலப்பர்ஸ், சோழிங்கநல்லூரில் அதன் 101வது அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டமான ‘டேக் பிரத்யங்கிரா’ திட்டத்தின் அறிமுக விழாவை சமீபத்தில் நடத்தியது. இதற்கான புதிய லோகோவையும் வெளியிட்டது. விழாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுஹாசினி மணிரத்னம், எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் தேசியப் பசுமை தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, சவேரா ஓட்டல்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, மாபா ஸ்டிராடர்ஜிக் கன்சல்டன்ட்ஸ்  நிறுவனத்தின் இணை நிறுவனர் லதா பாண்டியராஜன், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்  நிறுவனத்தின் மண்டல மார்க்கெட்டிங் தலைவர் எஸ்.பத்மாவதி ஆகியோர் இணைந்து புதிய லோகோவை வெளியிட்டனர். நிகழ்ச்சியில், முன்னணி வங்கியாளர்கள், தொழிலதிபர்கள், சேவை வழங்குநர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ்.சதீஷ்குமார், “எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, திருப்தி ஏற்படுத்துவதற்காக சிறந்த, தரமான சேவையை இந்த திட்டம் வழங்கும்” என்றார்.




Tags : Cholinganallur ,TAG , Apartment project in Cholinganallur area by TAG Developers
× RELATED பைக் திருடர்களை பிடிக்க ‘ஜியோ டேக்’ புது திட்டம்