துணை ஜனாதிபதி தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: சென்னை வந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, நேற்று காலை 11.10 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அவருடன் அதே விமானத்தில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியும் வந்தார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை வரவேற்றார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்பி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக சென்னை வந்த ெஜகதீப் தன்கருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் காரில் ஏறிச் சென்ற அவர், கிண்டி ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை 3.30 மணிக்கு தனி விமானத்தில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அவரை சபாநாயகர் அப்பாவு, தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: