×

சென்னை மற்றும் புறநகரில் கழிவு நீரை நீர் நிலைகள் ,மற்றும் காலி இடங்களில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மாசு கட்டுப்பாடு வாரியம்

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் கழிவு நீரை நீர் நிலைகள் ,மற்றும் காலி இடங்களில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆய்வின் போது சூத்திரகரிக்கப்படாத கழிவு நீரை நீர்நிலைகள், காலி இடங்களில் வெளியேற்றுவது தெரியவந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் உரிமம் பெட்ரா டேங்கர் லாரி மூலம் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். நீர்நிலை, காலி நிலங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது .

தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் தமிழ்நாட்டில் காற்று, நீர் மற்றும் புவிப்பரப்பு மாசடைதல் மற்றும் ஒலிமாசு ஆகியவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு அமைப்பாகும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கழிவு நீரை அகற்றும் தனியார் லாரிகள் அவற்றை முறையாக எந்த இடத்தில் வெளியேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பின்பற்றாமல் நீர்நிலைகள், மழை நீர் கால்வாய் பகுதியில் விட்டு விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது.

இதன்படி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம் பெற வேண்டும். ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். உரிமம் பெற்றவர் தவிர வேறுயாரும் மலக்கசடு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமும் 265 லாரிகள், 1,300 முதல் 1,400 நடை வரை, கழிவு நீர் கொட்டுகின்றன. இதற்காக, 3,500 லிட்டர் கொண்ட ஒரு லாரி கழிவு நீருக்கு, 150 ரூபாயை வாரியம் வசூலிக்கிறது. ஆனால் சில லாரி உரிமையாளர்கள், கழிவு நீரை லாரியில் ஏற்றி, அதை வடிகால், கால்வாய், ஏரி, குளங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், நிலத்தடி நீர் மாசடைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, அந்தந்த மண்டலங்களில் உள்ள கழிவு நீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் தான் கழிவு நீரை கொட்ட வேண்டும் என, வாரியம் அறிவுறுத்தி உள்ளது.


Tags : Stern ,Chennai ,Pollution Control Board , Stern action will be taken against discharge of waste water into water bodies, empty spaces in Chennai and suburbs: Pollution Control Board
× RELATED ஈஷா சார்பில் போளுவாம்பட்டியில்...