ரூ.2,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரிக்கு ஒன்றரை ஆண்டு சிறை..!!

சென்னை: ரூ.2,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரி அசோக்குமாருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ல் விடுப்பு கடிதம் தராமல் இருந்த எழும்பூர் எஸ்.ஐ. சண்முகத்தின் ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.500 பிடித்தம் செய்துள்ளார். மாதம் ரூ.500 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்து எஸ்.ஐ. சண்முகத்துக்கு 2008ல் ஓய்வுபெற அனுமதி தரப்பட்டது. ஓய்வுபெற அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து இணை ஆணையர் அலுவலகம் மூலம் அரசிடம் எஸ்.ஐ. மேல்முறையீடு செய்தார். மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.ஐ. சண்முகத்திடம் அதிகாரி அசோக்குமார் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

Related Stories: