×

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டார் தொழில் அதிபர் கவுதம் அதானி!!

மும்பை : உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டார் தொழில் அதிபர் கவுதம் அதானி. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று ஒரே நாளில் ரூ.19,850 கோடி சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்துள்ளது.ரூ.19,850 கோடி குறைந்ததால் அதானியின் சொத்து மதிப்பு ரூ.2,72,115 கோடியாக சரிந்து 39வது இடத்திற்கு சென்றுள்ளார்.

 அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்கு விலைகளும் இன்றும் சரிவடைந்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.54 குறைந்து ரூ.1,140ல் வர்த்தகமாகி வருகிறது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.23 சரிந்து ரூ.439 ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.7 குறைந்து ரூ.132 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. டோட்டல் கேஸ் பங்கு ரூ.35 சரிந்து ரூ.680ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.33 குறைந்து ரூ.642 ஆகவும் உள்ளது. அதானி வில்மர் பங்கு ரூ.17 குறைந்து ரூ.327 ஆகவும், அம்புஜா சிமென்ட்ஸ் பங்கு ரூ.5 குறைந்து ரூ.324 ஆகவும் உள்ளன. அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏ.சி.சி. பங்கு ரூ.16  சரிந்து ரூ.1,677க்கு விற்பனையாகி வருகிறது.



Tags : Gautam Adhani , World, Billionaires, Tesla, Founder, Elon Musk
× RELATED விண்வெளியில் இருந்து பார்த்தாலும்...