×

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இளைய சகோதரரான பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் தமிழகம் வந்துள்ளனர். தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வரும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக, சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சீச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் விரைவில் சிகிச்சை முடிந்து டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Tags : Narendra Modi ,Chennai Apollo Hospital , Prime Minister Narendra Modi's brother admitted to Chennai Apollo Hospital due to ill health!
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...