×

அமைச்சர் உதயநிதியுடன் டெல்லி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: அரசு முறை பயணமாக, இரண்டு நாள் டெல்லி சென்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டெல்லி தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்தநிலையில், தமிழ்நாடு இல்லத்தில் நேற்று டெல்லி தமிழ்ச்சங்க தலைவர் சக்தி பெருமாள், துணைத்தலைவர் ராகவன் நாயுடு, பொதுச்செயலாளர் முகுந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அதேபோல, டெல்லி முத்தமிழ்ப் பேரவை தலைவர் சத்யசுந்தரம், பொதுச் செயலாளர் கண்ணன் மற்றும் பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதேபோல், டெல்லி தமிழ்க்கல்விக் கழக பொதுச் செயலாளர் ராஜூ, துணைத் தலைவர் ரவி மற்றும் பள்ளி முதல்வர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, டெல்லி தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி விஜயன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : Delhi ,Tamil Sangh Executives ,Minister ,Udayanidhi , Delhi Tamil Sangh Executives meeting with Minister Udayanidhi
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...