சாத்தூர் அருகே பரபரப்பு; பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் அதிகாலையில் பற்றிய பயங்கர தீ: ரூ.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

ஏழாயிரம்பண்ணை: சாத்தூர் அருகே, பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (55). இவருக்கு சொந்தமான பார்சல் சர்வீஸ் அலுவலகம் பைபாஸ் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பார்சல்களை அடுக்கி வைத்திருந்தனர். அலுவலகத்தின் வெளிப்புறத்திலும் பார்சல்கள் வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென பார்சல்களில் தீ பற்றியது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சாத்தூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பார்சல் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. தீயில் கருகிய பொருட்களில் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: