×

கிக் பாக்ஸிங் போட்டியில் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

அலங்காநல்லூர்: மதுரை மாவட்ட அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி குயின் மீரா பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபிஷேக், சந்தோஷ்குமார், நிரஞ்சன் ஆகியோர் முதல் பரிசாக தங்கம் வென்றனர். சஞ்சய் என்ற மாணவர் வெண்கலம் வென்றார்.

முதலிடம் பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் கோவையில்  நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் பிராக்ரன்ஸ் லதா, உதவி தலைமையாசிரியர் மரிய ஜோசப், உடற்கல்வி இயக்குனர் ஞானசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் காட்வின், முத்துக்குமார், ஜெயபால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Tags : Alanganallur Govt School , Alanganallur Govt School students achieve feat in kickboxing competition
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...