×

சென்னையில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு மூலம் அதிமுக விதிகளில் திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது: வழக்கறிஞர் கோரிக்கை மனு

புதுடெல்லி: வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனு வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் தொடரப்பட்ட சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் தகுதியின் அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு நடக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு மூலம் அதிமுகவின் விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது. இதேபோன்று 29.4.2022ல் சமர்பிக்கப்பட்ட உள்கட்சி தேர்தல் முடிவுகள், 1.12.2021ல் செயற்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சி விதி, 12.9.2017ல் திருத்தப்பட்ட கட்சி சட்ட விதிகள் ஆகிய அனைத்தையும் அங்கீகாரம் செய்ய கூடாது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் கட்சி சின்னம் கோரும் எந்த மனுக்களையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது.

Tags : Election Commission ,AIADMK ,General Assembly ,Chennai , Election Commission should not approve amendments to AIADMK rules by General Assembly held on July 11 in Chennai: Lawyer's Petition
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...