×

இடும்பாவனம்-வேதாரண்யம் சாலையில் சிதிலமடைந்த நிழலகத்தை அகற்ற வேண்டும்

*புதிதாக கட்ட கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை- வேதாரண்யம் சாலையில் உள்ள சிதிலமடைந்து நிழலகத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் வேதாரண்யம் - முத்துப்பேட்டை சாலையில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பகுதியாக அமர்ந்து இருக்கும் வகையில் மேலப்பெருமழை பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழலகத்திற்கு வந்துதான் மேலப்பெருமழை மக்கள் மட்டுமின்றி இடும்பாவனத்தை கிராம மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் முத்துப்பேட்டை - வேதாரண்யம், அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த பயணிகள் நிழற்கட்டிடம் பயனடைந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது பயணிகள் நிழற்கட்டிடத்தின் மேல் சிலாப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் எலும்புகூடாக காட்சியளிக்கிறது.
கட்டிட சுவர்களும் சேதமாகி உருக்குலைந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை இடித்துவிட்டு புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Idumbavanam ,Vedaranyam road , Muthupet: The people demand that the dilapidated Astralakam on the Muthupet-Vedaranyam road should be demolished and built anew.
× RELATED 4 பிரிவுகளில் வென்று சாதனை திருவாரூர்...