ஊட்டி :நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிகை அதிகரித்துள்ளதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும், குளிர் காணப்படுகிறது. இந்த சூழலில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நெருங்கிய நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மட்டுமே காண முடிகிறது.
அதே நேரம் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுைற நாளான நேற்று ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா பூங்காவையை ஏராளமான சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்ட நிலையில், அங்கு மலர்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். இதேபோல் நகருக்கு வெளியில் உள்ள சுற்றுலா தலங்களான சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், அருவி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.
