×

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதித்திட்டம்: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் டிஜிபியை சந்தித்த பின் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவிச்சாயம் பூசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக டிஜிபியிடம் புகார் தெரிவித்தோம். நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பாஜக, இந்து முன்னணி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என கூறினார்.

பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக: வழக்குப்பதிவு செய்க

பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் பாஜகவினர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாஜகவினர் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்த சதி செய்கின்றனர் என்று திருமாவளவன் கூறினார்.

ஆளுநருக்கு திருமாவளவன் கண்டனம்:


முற்போக்கு சக்திகளை சீண்டும் வேலைகளை ஆளுநர் செய்கிறார் எனவும் திருமாவளவன் தெரிவித்தார். வடமாநிலங்களை போல் தமிழ்நாட்டை வன்முறைக்கு ஆளாக்க நினைக்கிறார்கள். ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வன்முறையை தூண்டுவதே சங்பரிவார் கலாச்சாரம்:

வன்முறையை தூண்டுவதே சங்பரிவார்களின் கலாச்சாரம் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : BJP ,Tamil Nadu ,Vishik ,Thirumavalavan , Tamilnadu, law and order, BJP conspiracy, Thirumavalavan
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...