×

சென்னையில் ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்க ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்..!

சென்னை: சென்னையில் ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன. திருவான்மியூர் ரூ.446 கோடி, வடபழனி ரூ.610 கோடி, வியாசர்பாடி ரூ.485 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்படுகின்றன. வணிகவளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது. பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப்புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டது.  

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் இயக்குகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான பேருந்துகளை இயக்குகின்றன.

மாநகர பேருந்துகளில் சொகுசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் குளிர்சாதன நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவீன சொகுசுப் பேருந்துகள் புறநகர பேருந்துகளாக சில போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படுகின்றன. அதிநவீன சொகுசுப் பேருந்துகள் விரைவுப் போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளது. திருவான்மியூர், வடபாணி மற்றும் வியாசர்பாடியில் பேருந்து முனையம் ரூ.1543 கோடி செலவில் பேருந்து நிறுத்தங்கள், தரைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பு பகுதிகள் மற்றும் மேல் தளங்களில் சிக்கலான வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதனால் மக்கள் சிரமமின்றி பேருந்து நிலையங்களை பயன்படுத்தலாம்.


Tags : Chennai Muncipal Transport Bureau ,Chennai , The Chennai Metropolitan Transport Corporation has issued a tender for the modernization of 3 bus terminals at an estimated cost of Rs.1543 crore..!
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...