×

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: மல்லி 400; முல்லை 300க்கு விற்பனை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், சேலம், ஓசூர், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ ஐஸ் மல்லி 800க்கும் மல்லி 1, 300க்கும் முல்லை 1,000க்கும் ஜாதிமல்லி 1,000க்கும் கனகாம்பரம் 800க்கும் சாமந்தி 140க்கும் சம்பங்கி 100க்கும் சாக்லேட் ரோஸ் 120க்கும் பன்னீர் ரோஸ் 100க்கும் அரளி பூ 350க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ஐஸ் மல்லி 300க்கும் மல்லி 400க்கும் முல்லை 300க்கும் ஜாதிமல்லி 300க்கும் கனகாம்புரம் 300க்கும் பன்னீர் ரோஸ் 50க்கும் சாக்லேட் ரோஸ் 60க்கும் சாமந்தி 70க்கும் சம்பங்கி 30க்கும் அரளி பூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாள் முடிந்த நிலையில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. இன்னும் ஒரு வாரம் பூக்களின் விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். அடுத்த மாதம் 2ம் தேதி அன்று முகூர்த்த நாள் வருவதால் அன்றைய தினம் பூக்களின் விலை மீண்டும் உயரும்’ என்றார்.

Tags : Koyambedu , Flower prices plummet in Koyambedu flower market: Jasmine 400; Selling for 300 per mullai
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...