இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; நியூசிலாந்து 209 ரன்னில் சுருண்டு பாலோஆன்

வெலிங்டன்:இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 186, ஜோ ரூட் நாட் அவுட்டாக 153 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம்நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது. 3வது நாளாக இன்று டாம் ப்ளன்டெல் 38 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் சவுத்தி அதிரடியாக 49 பந்தில், 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன் எடுத்து பிராட் பந்தில் கேட்ச் ஆனார். முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 53.2 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. இங்கிலாந்து பவுலிங்கில் ஆண்டர்சன் 3, பிராட் 4, ஜாக் லீச் 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 226 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை நியூசிலாந்து ஆடியது. தொடக்க வீரர்கள் டாம் லதாம், டெவோன் கான்வே பொறுப்பாக ஆடி வலுவான தொடக்கம் அமைத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 149 ரன் சேர்த்த நிலையில் டெவோன் கான்வே 61 ரன்னில், ஜாக் லீச் பந்தில் கேட்ச் ஆனார். டாம் லதாம் 83 ரன்னில் ஜோரூட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். வில் யங் 8 ரன்னில் லீச் பந்தில் போல்டானார். 70 ஓவரில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் 18, நிக்கோலஸ் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். காலை 10 மணி நிலவரப்படி இன்னும் 3 விக்கெட் கைவசம் இருக்க நியூசிலாந்து 44 ரன் பின்தங்கி இருந்தது.

Related Stories: