×

ஜப்பானில் நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானின் ஹோகைடோ தீவில் நேற்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் வடக்கு பகுதியில் 61 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் பலி, பொருட் சேதம் ஏற்பட்டது தொடர்பாக உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதே சமயம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதே தீவில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, துருக்கியில் அனடோலியா பகுதியில் நேற்று 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Tags : Japan , Japan, earthquake, tsunami warning
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!