×

மிரட்டி ஆபாசமாக நடிக்க வைத்ததாக வாலிபர் புகார்: கேரள பெண் இயக்குனர் திடீர் கைது

திருவனந்தபுரம்:  ேகரளாவில் ஆபாச வெப்தொடரில் மிரட்டி நடிக்க வைத்ததாக வாலிபர் புகார் கொடுத்ததை தொடர்ந்து, கோட்டயத்தைச் சேர்ந்த பெண் இயக்குனரை திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர், லட்சுமி தீப்தா( 37). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஓடிடி தளத்துக்காக  வெப்தொடர் இயக்கினார். இதில் திருவனந்தபுரம் வெங்கானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் அந்த வாலிபர், திருவனந்தபுரம் அருவிக்கரை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் அவர், ‘சஸ்பென்ஸ் வெப்தொடர் ஒன்றில் நான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர். பிறகு அதில் நடிப்பதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டேன். இதுதொடர்பாக அந்த வெப்தொடரின் இயக்குனர் லட்சுமி தீப்தாவும், ஓடிடி தளத்தைச் சேர்ந்த சிலரும் என்னை அணுகி னர். பல நாட்கள் படமாக்கப்பட்ட பிறகுதான், அது ஒரு ஆபாச வெப்தொடர் என்று தெரிந்தது. இதனால், தொடர்ந்து நான் நடிக்க மறுத்தேன். ஆனால், ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து போட்டிருப்பதாக கூறி, என்னை மிரட்டி அதில் நடிக்க வைத்தனர். அந்த வெப்தொடரை ஒளிபரப்ப  ஓடிடிக்கு தடை விதிக்க வேண்டும். வெப்தொடர் ஒளிபரப்பானால், என் குடும்ப வாழ்க்கை கடுமை யாகப் பாதிக்கும்’ என்று கூறியிருந்தார்.

 இதையடுத்து இயக்குனர் லட்சுமி தீப்தா மற்றும் ஓடிடி உரிமையாளர் மீது அருவிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே லட்சுமி தீப்தா  முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து லட்சுமி தீப்தாவை போலீசார் கைது செய்தனர். இந்தச்சம்பவம் மலையாளப் படவுலகில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Waliber ,Miratti ,Kerala , Kerala girl director, teenager complains of threatening to act obscene
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...