×

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஈரோடு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் நாச்சியார் (95). இவர், கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால், தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில் பழனியம்மாளின் உடல்நிலை மோசமானதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி, அவரை பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனியம்மாள் நாச்சியார் நேற்று இரவு 10.02 மணியளவில் மரணம் அடைந்தார்.

பழனியம்மாளின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்று, பெரியகுளம் நகராட்சி பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என ஈரோடு பிரசாரம் முடிந்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.


Tags : CM O. Edapadi Palanisamy ,Panneerselvam , Edappadi Palaniswami condoles the death of former Chief Minister O. Panneerselvam's mother
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...