×

பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே பாலம் பராமரிப்பு பணி; இன்றிரவு சில புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பேசின்பிரிட்ஜ் - வியாசர் பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் புறநகர் மின்சார ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படுகின்றன. அதாவது, சென்னை சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.35, சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 11.30, 11.45, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்- ஆவடி இடையே 11.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று (பிப்.25ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றது.

சென்னை சென்ட்ரல் - பட்டா பிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை 4.15, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30, 5.40, சென்னை சென்ட்ரல் அரக்கோணம் இடையே அதிகாலை 5.30, ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 3.50, 4, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்னை சென்ட் ரல் இடையே அதிகாலை 3.20, திருவள்ளூர்-சென்னை சென்ட் ரல் இடையே அதிகாலை 3.50, 4.45, அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை (பிப்.26ம் தேதி) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது.

மேலும், அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணி, பட்டாபிராம்- சென்னை சென்ட்ரல் இடையே இரவு 10.45 மணி, திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே அதிகாலை 3.50 மற்றும் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையே ரத்து செய்யப்படுகின்றது. என்று தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Basin Bridge ,Vyasarbadi ,Southern Railway , Bridge maintenance work between Basin Bridge – Vyasarpady; Some Suburban Trains Canceled Tonight: Southern Railway Notification
× RELATED தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு