சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு பின்னடைவு : நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து இடைநீக்கம்

பாரிஸ்:உலகளாவிய நிதிக் குற்ற கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) பாரிஸில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது சர்வதேச நிதி பரிமாற்றங்களை கண்காணிக்கும். மேலும் உலகளாவிய சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடும் அரசுகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட 39 நாடுகளும்,  பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய  ஒன்றியமும் இடம் பெற்றுள்ளன. உக்ரைன் இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.

இந்நிலையில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளாவிய நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் எஃப்ஏடிஎஃப்-யின் கொள்கைகளுக்கு எதிராக உக்ரைன் விஷயத்தில் ரஷ்யா செயல்பட்டு வருகிறது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதைக்கான உறுதிப்பாட்டை ரஷ்யா மீறியுள்ளது. எனவே எஃப்ஏடிஎஃப்-யின் உறுப்பினர் எந்த அந்தஸ்தில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: