×

வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய்-க்கு புவிசார் புவிசார் குறியீடு… 45 பொருட்களுக்கு GI Tag பெற்றது தமிழ்நாடு

வேலூர்:புவிசார் குறியீடு என்பது ஒரு நாட்டின் பாரம்பரியமான உற்பத்தி பொருள். அது வேளாண் உற்பத்தியாக இருந்தாலும், கைவினை பொருளாக இருந்தாலும், உணவு பொருளாக இருந்தாலும் அதற்கான சான்று பெறுவதன் மூலம் அதை சார்ந்தவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது.இச்சான்று பெறுவதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்பு பெயரை பயன்படுத்தி தொடர்புடைய பொருளை உற்பத்தி செய்வதற்கோ, சந்தைப்படுத்துவதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதை புவிசார் குறியீட்டு உரிமை உறுதி செய்கிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தின் சிறப்பாக அமைந்துள்ள இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், வேலூர் முள்ளுக்கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அதற்கான சான்று கிடைத்துவிடும் என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆர் எஸ் மங்கலம், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் விளையக்கூடிய முண்டு மிளகாய் என்று அழைக்கப்பட்டும் ஒருவகை குண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.இதன் மூலம் தமிழ் நாட்டைச் சேர்ந்த 45 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

Tags : Vellore 'Mullu' Kathari ,Ramanathapuram 'Mundu' ,Tamil Nadu , வேலூர் ,முள்கத்திரிக்காய், புவிசார்
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...