×

பழைய ஆட்சியின் விசுவாசி மேல ஏகப்பட்ட முறைகேடு புகார் குவிவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சாராய வியாபாரி மாமூல் லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புரம் கொண்ட  மாவட்டத்தில், அருகில் உள்ள யூனியன் பிரதேச பிரபல சாராய வியாபாரி காலாகாலமாக காக்கிகளை கையில் போட்டுக் கொண்டு கச்சிதமா வியாபாரத்தை  செய்து வந்திருக்காராம். உயர்அதிகாரிகள் மூலம், இவரை புடிக்கபோட்ட  தனிப்படை டீமில், கூட்டாளி ஒருவர் சிக்க, அவரிடம் கைப்பற்றப்பட்ட போனில்  காக்கிகள் உரையாடல்தான் அதிகம் இருந்திருக்காம். கறை படிந்த காக்கிகள் 12  பேரை உடனடியாக டிஐஜி, வெளிமாவட்டத்திற்கு தூக்கியடித்துள்ளாராம். ஆனால்,  சாராய வியாபாரி மாமூல் லிஸ்டில் 100ஐ தாண்டி போலீஸ் எண்ணிக்கை  சென்றிருக்காம். லிஸ்ட் நீண்டு கொண்டே செல்வதால, காக்கி உயர் அதிகாரிகள்  அதிர்ச்சியில் இருக்காங்களாம். புதுசா வந்த எஸ்பி, நடவடிக்கை எடுத்தாலும்,  ஒரே நேரத்தில் 100 பேர்மீது எப்படி கைவைக்கறதுன்னு  விழிபிதுங்கியிருக்காராம். அதிமுக ஆட்சியில் நடக்கிற  சாராய விற்பனையை தடுக்க, கறைபடிந்த காக்கிகளை பாரபட்சம் பார்க்காமல்  தூக்கியடிக்க எஸ்பி முன்வர வேண்டுமெனவும் நேர்மையான காக்கிகள்  கோரிக்கை வச்சிருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பழைய ஆட்சியின் விசுவாசி மேல ஏகப்பட்ட முறைகேடு புகார் இருக்காமே..’’ ‘‘கோவை  மாநகராட்சியில் ஒரே மண்டலத்தில் தொடர்ச்சியாக உதவி கமிஷனராக பணிபுரிந்த  இரண்டெழுத்து அதிகாரி ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ஓய்வு  பெற வேண்டியவர். ஆனால், அப்போதைய ஆட்சியாளர்கள் பக்கம் வலுவாக சாய்ந்து  விட்டதால், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றார். வேறு எந்த உதவி  கமிஷனருக்கும் கிடைக்காத பாக்கியம் இவருக்கு கிடைத்தது. 2021 தமிழக  சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கியபோது, மாநகராட்சி மேற்கு மண்டல உதவி  கமிஷனராக நியமிக்கப்பட்டார். பின்னர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும்  நியமிக்கப்பட்டார். இதன்பிறகு, கணக்கு பிரிவுக்கு உதவி கமிஷனராக  மாற்றப்பட்டார். தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்து  விடுவார் என்ற காரணத்தினால் பிரதான அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இவர்  மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், வரும் 30-ம்  தேதி ஓய்வு பெற உள்ளார். இவரது பதவிக்காலத்தில் நடந்த ஊழல், முறைகேடு  தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சில  உயரதிகாரிகள், அரசுக்கு மனு தட்டி விடுகிறார்கள். அதனால் இவர், சுமுகமான  முறையில் ஓய்வுபெற்று வீட்டுக்கு செல்வாரா அல்லது அரசின் நடவடிக்கைகளை  எதிர்கொள்வாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘கன்னியாகுமரியில் மாவட்ட பிரச்னை என்ன…’’ ‘‘இங்க கஞ்சா மோதலில்  இரட்டை கொலை நடந்த மறுநாளே, டி.எஸ்.பி. இடமாற்றி காத்திருப்போர்  பட்டியலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. கடந்த இலை கட்சி ஆட்சியின்  போது, கன்னியாகுமரி அருகே திமுக மருத்துவ அணி நிர்வாகி ஒருவர் தற்கொலை  செய்த விவகாரத்தில் இந்த டி.எஸ்.பி.யை  தான் குற்றம் சாட்டி ஆடியோ வந்தது.  இந்த விவகாரத்தை அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் செல்வாக்கு காரணமாக  காவல்துறை மூடி மறைத்தது. தொடர்ந்து கன்னியாகுமரியிலேயே டி.எஸ்.பி.யாக   நீடித்து வந்தார். இவர் ஏற்கனவே நாகர்கோவிலில் டி.எஸ்.பி.யாக இருந்து  வக்கீல்கள் போராட்டம் உள்ளிட்ட  பிரச்னைகளால் வெளி மாவட்டத்துக்கு  மாறுதலாகி சென்றார். ஆனால் மாறுதலாகி சென்ற சில வருடத்திலேயே  கன்னியாகுமரிக்கு டி.எஸ்.பி.யாக வந்தார். இரண்டு வருடங்கள் வரை இங்கு  இருந்த இவர் இப்போது மாற்றப்பட்டுள்ளார். மீண்டும் இவர் கண்டிப்பாக குமரி  மாவட்டத்துக்கு வந்து விடுவார் என இப்போதே பேச தொடங்கி உள்ளனர். ஏற்கனவே  பணியில் இருப்பவர்களை மீண்டும், மீண்டும் அதிகாரிகளாக நியமிப்பதால்,  கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே  இனியாவது புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் பேசி  கொள்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா. …

The post பழைய ஆட்சியின் விசுவாசி மேல ஏகப்பட்ட முறைகேடு புகார் குவிவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Old ,Mamul ,Peter ,Puram ,
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்