×

காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என மாணவர் சேர்க்கையில் பயன்படுத்தபடாது: பல்கலை சட்டத்தில் அரசு திருத்தம்

சென்னை: தமிழகம் முழுவதிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என மாணவர் சேர்க்கையில் பயன்படுத்தபடாது என்று பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என்றும் தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல்கலை சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத்திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கோருதலை இனி மேற்கொள்ள முடியும்.

பல்கலை.கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும் என்று சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர்.  தமிழகத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளின் செவித் திறன்களைப் பரிசோதிக்கும் வகையில், தமிழக அரசு மாவட்டந்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும்



Tags : Deaf, mute, leprosy will not be used in admissions: Govt amends University Act
× RELATED மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து...