×

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வாட்டர் எக்ஸ்போ கண்காட்சி

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட 3 நாள் ‘‘வாட்டர் எக்ஸ்போ 2023” 16வது கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நீர் மேலாண்மை குறித்த ‘‘வாட்டர் எக்ஸ்போ 2023” 16வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், கடந்த 23ம் தேதி தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த நீர் கண்காட்சியில் அரசுத்துறை, தொழில்துறை, பெரிய நிறுவனங்கள், முக்கிய பங்கை வகித்தன. நேற்று நடந்த கருத்தரங்கில், நீர் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை, நீர்வள நிபுணர்கள் உயர்தர தொழில்நுட்பம், ஆட்டோமேஷன், நீர்மேலாண்மை ஆகியவை குறித்து பேசினர். மேலும், ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, புதிய ஆய்வுகளை குறித்து விளக்கமளித்தனர். கண்காட்சியில், நீரில் நச்சு கலப்பதை தவிர்க்க கூடிய புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள், குடிநீர் இணைப்பு குழாய்கள், உதிரி பொருட்கள், மோட்டார்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், தன்ணீர் டேங்க்குகள் இடம்பெற்றன.

Tags : Water Expo Exhibition ,Nandambakkam Trade Centre , Water Expo Exhibition at Nandambakkam Trade Centre
× RELATED கிரெடாய் நிறுவனம் சார்பில் மார்ச் 8...