×

தி.நகர் அபார்ட்மெண்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில்: புரோக்கர் கைது

சென்னை: தி.நகரில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர் நரசிம்மா சாலை 1வது ெதருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட சர்வீஸ் அபார்ட்மெண்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் பிரபல பாலியல் புரோக்கர் திருவாரூர் மாவட்டம் பதூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (26) என தெரியவந்தது. இவர், தேனாம்பேட்டையில் மெட்ராஸ் மெட்ரோ ரெசிரேஷன் கிளப் உரிமையாளர் இளையராஜா என்பவரின் உதவியாளர் என தெரியவந்தது.

கார்த்திகேயன் ஐ டெக் பாலியல் தொழில் நடத்தி வந்த இளையராஜாவின் உதவியாளர் என்றும், இவர்கள் கிளப்பிற்கு வரும் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இளம்பெண்கள் புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பாலியல் புரோக்கர் கார்த்திகேயனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு இளம்பெண் மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள  மெட்ராஸ் மெட்ரோ ரெசிரேஷன் கிளப் உரிமையாளர் இளையராஜா மற்றும் பெண் பாலியல் புரோக்கர் பானுவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : T. Nagar , Sex business with women in T. Nagar apartment: broker arrested
× RELATED ஆந்திராவில் இருந்து பைக்கில் கடத்தி...