×

மேகாலயா எல்லை மார்ச் 2 வரை மூடல்

ஷில்லாங்: மேகாலயா எல்லையை மார்ச் 2ம் தேதி வரை மூடும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேகாலயாவின் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மார்ச் 2ம் தேதி வரை மேகாலயா எல்லையை மூட இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி எப்.ஆர்.கார்ரோங் கூறியதாவது, “மேகாலயாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக மாநிலத்திலுள்ள இந்தியா-வங்காளதேச எல்லையை மார்ச் 2 வரை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அசாம் மாநிலத்துடனான எல்லைகளையும் மார்ச் 2 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Tags : Meghalaya , Meghalaya border closure till March 2
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...