×

துபாய் டென்னிஸ்: பைனலில் இகா

துபாய்: பிரபல டபுள்யு.டி.ஏ தொடரான துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் நேற்று மோதிய ஸ்வியாடெக் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டிலும் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த அவர் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 28 நிமிடத்துக்கு நீடித்தது.


Tags : Dubai Tennis , Dubai Tennis: Iga in final
× RELATED துபாய் டென்னிஸ் ஜாஸ்மின் சாம்பியன்