×

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு!: ஒரே மாதத்தில் ரூ.23,000 கோடியை இழந்த எல்.ஐ.சி...!!

சென்னை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் ஒரே மாதத்தில் எல்ஐசி ரூ.23,000 கோடியை இழந்துவிட்டது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசி ரூ.30,127 கோடி அளவுக்கு முதலீடு செய்திருந்தது. கடந்த டிசம்பரில் லாபத்துடன் சேர்ந்த எல்ஐசி வசம் இருந்த அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடிக்கு மேல் இருந்தது. ஜனவரி 24ல் ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகள் அம்பலமானதை அடுத்து பங்கு சரிந்தது. எல்ஐசி நிறுவனம் வசம் இருந்த அதானி குழும நிறுவன பங்குகளின் விலையும் சரிந்ததால் லாபம் கரைய தொடங்கியது.

டிசம்பரில் ரூ.50,000 கோடியாக இருந்த லாபம் ஜனவரி 30ம் தேதி ரூ.26,000 கோடியாக குறைந்துவிட்டது. ஜனவரியிலேயே தன்வசம் இருந்த அதானி நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி விற்றிருந்தால் ரூ.26,000 கோடியாவது மிஞ்சியிருக்கும். எல்ஐசி தன்வசமிருந்த அதானி நிறுவன பங்குகளை விற்காததால் லாபம் முழுவதும் ஒரு மாதத்தில் கரைந்துவிட்டது. ஜனவரி 30ம் தேதியில் இருந்து இன்று வரை படிப்படியாக எல்ஐசி தன் லாபத்தில் ரூ.22,876 கோடியை இழந்துவிட்டது. எல்ஐசி ரூ.30,127 கோடிக்கு வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகளின் மதிப்பு வெறும் ரூ.30,000 கோடி உயர்வுடன் ரூ.33,686 ஆக உள்ளது.


Tags : Adani Group ,LIC , Adani Group, share price, Rs.23,000 crore, LIC
× RELATED ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப்...