டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் மீது இளம்பெண் பாலியல் புகார்

புதுடெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி இருந்து வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ரோகன் ஜெட்லி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ள அவர், ரோகன் ஜெட்லி எனக்கு எதிராக செய்த மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான செயல்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவே இதை அனுப்புவதாகவும், ரோகன் ஜெட்லி மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து எனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள், அவருக்கு எதிராகத் தேவையான, பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்தக் கடிதத்தை உங்கள் முன் கொண்டு வரும்படி என்னை நிர்ப்பந்தித்துள்ளது எனவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும் நான் வாக்கிங் சென்றபோது, 2 பேர் என்னிடம் வந்து ரோகனுடனான எனது உறவைப் பற்றி யாரிடமாவது சொன்னால், இனி யாரிடமும் என் முகத்தைக் காட்ட முடியாது என்று மிரட்டினர். அடுத்த முறை நான் அவர்களின் வழியில் வந்தால், என் முகத்தில் ஆசிட் வீசுவோம் என்றும் அவர்கள் என்னை மிரட்டினர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: