×

தெலங்கானாவில் சீனியர் மாணவர்கள் ராக்கிங் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி

*மாணவன் மீது எஸ்சி, எஸ்டி அட்ராசிட்டி வழக்கு

திருமலை : தெலங்கானாவில் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ததால் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவன் மீது எஸ்சி, எஸ்டி அட்ராசிட்டி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டத்தில் உள்ள கொடகண்ட்லா அடுத்த  மொண்ட்ராய் கிர்னிதாண்டாவை சேர்ந்தவர் தராவத் நரேந்திரா, ரயில்வே பாதுகாப்பு படை  ஏஎஸ்ஐ. இவர் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் குடியேறி வசித்து வந்து வருகிறார்.

இவருக்கு  3 மகள்கள் உள்ளனர். இளைய மகள் ப்ரீத்தி(26) தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்து 2022ல் காக்கித்தியா மருத்துவ கல்லூரியில்  மயக்கவியல் முதுநிலை படிப்பில் சேர்ந்தார். தற்போது, தேரி வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்காக, எம்ஜிஎம் மருத்துவமனையின் அவசர அறுவை சிகிச்சை அரங்கில் (எமர்ஜென்சி ஆபரேஷன் தியேட்டரில்) தினமும் மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை ஒரு உதவி பேராசிரியர், ஒரு எஸ்ஆர், ஒரு மூத்த பிஜி மற்றும் 2 ஜூனியர் பிஜி மாணவர்கள் பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சையீப் என்ற மூத்த மருத்துவ மாணவர் ப்ரீத்தியை ராக்கிங் செய்து தொந்தரவு செய்வதாக தனது தந்தை நரேந்திராவிடம் கூறினார். இதையடுத்து நரேந்திரா  கல்லூரி முதல்வரிடம் புகார் செய்வதாக கூறியதற்கு வேண்டாம் என தடுத்து நிறுத்தியுள்ளார். கடந்த 20ம் தேதி ப்ரீத்தி அழுது கொண்டே தெரிவித்ததால்  மூத்த மருத்துவ மாணவர் குறித்து  முதல்வர் மோகன்தாஸ், மயக்க மருந்து துறை தலைவர் நாகார்ஜூன ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சையீப் மற்றும் ப்ரீத்தி இருவரையும் அழைத்து கடந்த 21ம்  தேதி மாலை அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே ப்ரீத்தி தற்கொலைக்கு முயன்றார். சையீப் மீண்டும் ப்ரீத்தியை தனக்கு எதிராக புகார் செய்கிறாயா? என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், மன வேதனையடைந்த ப்ரீத்தி  கடந்த 22ம் தேதி அவசரகால ஆபரேஷன் தியேட்டரில் பணிகள் செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.  உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சீனியரின் ராக்கிங் பொறுத்து கொள்ள முடியாமல்  ப்ரீத்தி தனது   உடலில் செலுத்தி கொண்ட (அனஸ்தீசியா)  மயக்கம் ஊசி அதிகளவில் இருப்பதால் உடல் உறுப்புகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. வென்டிலேட்டரில் மருத்துவ சிகிச்சை அளித்து வரப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
இதுகுறித்து ஐதராபாத் போலீசார் ப்ரீத்தியை தற்கொலைக்கு துண்டும் வகையில் செயல்பட்ட சையீப் மீது எஸ்சி, எஸ்டி அட்ராசிட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ப்ரீத்தி ராகிங் செய்ததால் தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என்பதற்கு சீனியர் மருத்துவ மாணவர்களான ஜூனியர் டாக்டர்கள் சையீப்க்கு ஆதரவாக உள்ளனர்.  ராக்கிங் என்பது தவறான பிரசாரம் என்று  தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ரீத்தி மிகவும் தைரியமானவர்

இதுகுறித்து ப்ரீத்தியின் தந்தை நரேந்தர் கூறுகையில், ‘கடந்த 20ம் தேதி இரவு கல்லூரிக்கு சென்று ப்ரீத்திக்கு நேர்ந்த தொல்லை குறித்து மேலதிகாரிகளிடம் கூறினேன். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. சீனியர் மாணவர்கள் மத்தியில் ராக்கிங் சகஜமாக இருக்கும் என்று தான் நினைத்ததாகவும், பழங்குடியின பெண் என்று ப்ரீத்தியை தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். எனவே, தொல்லை கொடுக்கும் சையீப்பிடம் பேசுவதாக கூறியதற்கு ப்ரீத்தி  வேண்டாம். இதனால், மேலும் பிரச்னை வந்துவிடும். மதிப்பெண்கள் குறைவாக வந்துவிடுமோ என்ற பயத்தில் வேண்டாம் என்று சொன்னாள்.

ப்ரீத்தி மிகவும் தைரியமானவர்.  கொரோனாவில் கூட தனது கடமைகளை செய்தார். சையீப் தனது மகளை மிகவும் துன்புறுத்தியுள்ளார். இதனால், ப்ரீத்தி தற்கொலைக்கு முயன்றார். கல்லூரிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதற்காகவே ப்ரீத்தியை ஐதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தங்கள் மகளின் நிலைக்கு  காரணமான சையீப்பை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Telangana , Tirumala: In Telangana, a medical student attempted suicide by injecting anesthesia due to rocking by senior students
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...