டெல்லி: நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலை மீண்டும் நடத்த டெல்லி மேயர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது புகைப்படம் எடுப்பதாக குற்றம்சாட்டி பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். 47 உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்த நிலையில் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடங்கியது.