×

ஓராண்டை கடந்தும் நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் : உக்ரைனின் தேசிய கொடி நிறத்தில் ஒளிர்ந்த ஈபிள் கோபுரம்!!

கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரக்கூடிய தாக்குதல் நேற்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த தாக்குதல் தொடர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது தலைநகரான மாஸ்கோ நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இறையாகும் என ரஷ்யா அஞ்சியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது ரஷ்யா. மறுபுறத்தில் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்ற புதிய செய்தியை அமெரிக்காவிற்கு சொல்லவே வெகு தைரியமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த உக்ரைன் - ரஷ்யா போரினால் சுமார் 42 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 2 லட்சம் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ள நிலையில், 57 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 15 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை டேனேட்ஸ்க், கேர்சன், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 20% பரப்பளவை ரஷ்யாவிடம் இழந்தது உக்ரைன்.இதனிடையே உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதனை பிரதிபலிக்கும் வகையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் உக்ரைன் கொடியில் பிரதிபலித்தது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.  


Tags : Russia ,Ukraine War ,Eiffel Tower ,Ukraine , Russia, Ukraine, War, National Flag, Eiffel Tower
× RELATED ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி