எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது; பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

தஞ்சாவூர்: ‘எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல, சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. பொதுக்குழுவை கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை.

சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு, எங்களது கருத்துக்கு கட்டுப்படுத்தாது என நீதிபதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இன்று (நேற்று) வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான். நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழுதீர்ப்பை படித்து பார்த்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: