×

டிஎன்பிஎல் முதல் நாள் ஏலம் சாய் சுதர்சன் ரூ.21.60லட்சம்

மாமல்லபுரம்: டிஎன்பிஎல் ஏலத்தின் முதல் நாளில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சனை 21.60லட்சத்துக்கு நெல்லை அணி ஏலத்தில் எடுத்தது. மாவட்ட வீரர்களுக்கு முன்னுரிமை என்ற இலக்குடன் 2நாட்கள் டிஎன்பிஎல் ஏலம் நேற்று  மாமல்லபுரத்தில் தொடங்கியது. முதல் நாளான நேற்று சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய ஏ பிரிவில் உள்ள தமிழக வீரர்கள் விஜய் சங்கர் 10.25 லட்சத்துக்கு திருப்பூர் அணியும், வாஷிங்டன் சுந்தரை6.75லட்சத்துக்கு மதுரை அணியும் ஏலம் எடுத்தன. தங்கராசு நடராஜை 6.25லட்சத்துக்கு  திருச்சியும்,  சி.வி.வருணை 6.75லட்சத்துக்கு மதுரையும் ஏலத்தில் வாங்கின.

அதில் தமிழக மாவட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சந்தீப்  வாரியரை 8.5லட்சத்துக்கு நெல்லை ஏலத்தில் தேர்வு செய்தது. பி பிரிவு வீரர்களில் தமிழக வீரர் பாபா அபரஜித்தை சேப்பாக்கம் அணி 10லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. கூடவே 17.60 லட்ச ரூபாய்க்கு சஞ்ஜய் யாதவையும் அந்த அணி வாங்கியது. சோனு யாதவை 15.20 லட்சத்துக்கு ஏலத்தில் அள்ளிய நெல்லை முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சனை ரூ.21.60 லட்ச ரூபாய்க்கு தட்டி தூக்கியது. தொடர்ந்து 2வது நாளான இன்றும் ஏலம் நடைபெற உள்ளது. ‘எஞ்சிய வீரர்களும், முதல் நாள் ஏலத்தில் போகாத வீரர்களும் மீண்டும் ஏலத்தில் விடப்படுவார்கள்’ என்று டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி, நட்சத்திர ஆட்டக்காரர் அஷ்வின்(திண்டுக்கல்) ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : TNBL ,Sudarsan , TNBL First Day Auction Sai Sudarsan Rs.21.60 Lakhs
× RELATED அதிகம் எல்லாம் அதிகம் (சென்னை-பஞ்சாப் ஆட்டம் வரை)